close
Choose your channels

உர்பி ஜாவேத் பரவாயில்லை போல.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரை உலக நடிகைகளில் ஒருவரான உர்பி ஜாவேத் அவ்வப்போது படு கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவர் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு நடிகை ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உட்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ண்ட்ரூ கோச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயாவுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். தங்கள் ஃபாலோயர்களை திருப்தி செய்வதற்கு அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் படு கிளாமராக காஸ்ட்யூம் அணிந்து வந்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி ஒரு காஸ்ட்யூம் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment