உலக அதிசயத்திற்கு முன் லிப் கிஸ்… ஹாலிடே சென்ற பிரபல நடிகையின் அசத்தல் புகைப்படம்!!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு மீண்டும் எண்ட்ரி கொடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விடுமுறைக்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் ‘வதம்‘ திரைப்படத்தின் மூலம் கடந்த 2001 இல் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். அசத்தலான நடனம் மற்றும் துருதுருப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற இவர் சினிமாவில் தன்னுடைய 22 வருட அனுபவத்தை நிறைவு செய்திருக்கிறார். இன்றும் சினிமா, மாடலிங், நடனம் என்று ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் அவர் தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த அவர் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘மழை’, நடிகர் ரஜினிகாந்த்துடன் ‘சிவாஜி’, நடிகர் விக்ரமுடன் ‘கந்தசாமி’, நடிகர் தனுஷுடன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, நடிகர் விஜய்யுடன் ‘அழகிய திருமகன்’ என்று அடுக்கடுக்கான வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் பிரபல டென்னிஸ் வீரரான ஆண்ட்ரூ கோசெவ் என்பவரை காதலித்து வந்த அவர் கடந்த 2018 இல் திருமணம் செய்துகொண்டார். மேலும் கொரோனா லாக்டவுனில் இருந்தபோது அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர் தற்போது குடும்ப வாழ்க்கை மட்டுமின்றி சினிமாவிலும் ரிஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் எஸ்எஸ் ராஜமௌலியின் ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் நடித்திருந்த அவர் சமீபத்தில் கன்னட திரைப்படமான ‘கப்ஜா’ திரைப்படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநர் கார்த்தி நரேன் இயக்கவிருக்கிற ‘நரகாசூரன்’ திரைப்படத்திலும் அதேபோல ஆர் மாதேஷ் இயக்கவிருக்கிற ‘சண்டைக்காரி’ திரைப்படத்திலும் இணைந்துள்ளார். அதேபோல தெலுங்கில் ‘அட நாடே வீட நாடே’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கணவர் ஆண்ட்ரூ கோசெவ்வுடன் விடுமுறைக்காக இத்தாலி சென்றுள்ள அவர் உலக அதிசயங்களில் ஒன்றான ரோம் நகர் கொலோசியம் முன் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது தனது கணவர் ஆண்ட்ரூக்கு அவர் லிப் கிஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பண்டைய ரோமப் பேரரசின் மதிப்புமிக்க இந்த கொலோசியம் கி.பி.80 இல் கட்டி முடிக்கப்பட்டது என்பதும் அந்தக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொன்று விளையாடுவதற்காகவே பிரத்யேகமாக இந்த விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம்பிதியேட்டர் என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டரங்கத்தில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கமுடியும்.

ஆனால் கடந்த 217 ஆம் நூற்றாண்டில் மின்னல் ஒன்றில் தாக்கியதால் ஓவல் வடிவமைப்பில் உள்ள இந்தக் கட்டிடம் சிதைவடைந்து பின்னர் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி மதிப்புமிக்க ரோம் நகரின் கொலோசியத்திற்கு முன் நின்றுகொண்டு நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவருடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.