விருது நிகழ்ச்சியில் இவ்ளோ கிளாமரா? நடிகை ஸ்ரேயாவின் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!
- IndiaGlitz, [Monday,May 08 2023]
கிளாமர் மற்றும் க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். தற்போது திருமணம், குழந்தை என்று பிசியான வாழ்க்கைக்குப் பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர் விருது நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த உடையைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் அதற்குப் பிறகு நடிகர் தனுஷ், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் சிவாஜி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்திருந்தனர். இந்நிலையில் தெலுங்கு, தமிழ் சினமாவைத் தவிர பாலிவுட், சில ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல டென்னிஸ் வீரரை திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஒருசில பாலிவுட் சினிமாவில் நடித்துவரும் இவர் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது இவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான உடையை அணிந்திருந்தார். இந்தப் புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இவருக்கு 40 வயது என்றால் நம்ப முடிகிறதா? என்று கமெண்ட்டை பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் விருது நிகழ்ச்சியில் இவ்வளவு கிளாமர் தேவையா? என்றும் விமர்சித்துள்ளனர்.
மும்பை நகரமான பி- டவுனில் நேற்றிரவு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் நடிகை அனன்யா பாண்டே, ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், ஜெனிலியா – ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் இடம்பெற்ற நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.