சிம்புவின் 'AAA' படத்தில் ஸ்ரேயாவின் கேரக்டர்

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் ஸ்ரேயா மற்றும் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ரேயா நடித்து வரும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயா இந்த படத்தில் 'செல்வி' என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவருடைய கேரக்டர் மிகவும் எமோஷனல் கேரக்டர் என்றும் ரசிகர்களின் இதயத்தை திருடும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சிம்பு-ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு 'ரெளத்திரம்' படத்திற்கு பின்னர் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகும் ஸ்ரேயாவுக்கு இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள மேலும் இரு நடிகைகளின் தேர்வு விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

முடிவுக்கு வந்தது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் நடித்து வரும் அடுத்த படம் 'மொட்டசிவா கெட்ட சிவா'...

சுந்தர் சி-தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் இணைந்த மிகப்பெரிய டெக்னீஷியன்

கோலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் 100வது படம்...

'கபாலி' இயக்குனரின் அடுத்த ஆசை இதுதான்

இன்று உலகமே ஜூலை 22ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் என்னவெனில் அது கபாலி' ரிலீஸ் தினம் என்பதால்...

இரண்டே நாட்களில் 'இருமுகன்' டீசர்.

சீயான் விக்ரம் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில்...

சமுத்திரக்கனியின் 'அப்பா'வுக்கு கிடைத்த அடுத்த மரியாதை

சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்த 'அப்பா' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால்...