பிரியதர்ஷன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்ரேயா ரெட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக், பானுப்ரியா நடித்த கோபுர வாசலிலே, த்ரிஷா அறிமுகமான 'லேசா லேசா', பிரகாஷ்ராஜ் தேசிய விருது பெற்ற 'காஞ்சிவரம்' போன்ற தமிழ்ப்படங்களையும் ஏராளமான மலையாள படங்களையும் இயக்கிய தேசிய விருது பெற்றவர் இயக்குனர் ப்ரியதர்ஷன். இவர் தற்போது 'சில நேரங்களில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்து வந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். சாபுசிரில் கலை இயக்குனராக பணிபுரியும் இந்த படத்தை பிரபுதேவா-அமலாபால் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவை என்றும் இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீடு குறித்த தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com