நாகார்ஜூனன் மருமகளை மணந்த அப்பல்லோ ரெட்டியின் பேரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாகார்ஜூனன் - அமலா தம்பதியின் இளையமகன் அகில் கடந்த சில வருடங்களாக பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபல் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிலையில் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று பாரீசில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஸ்ரேயாவின் நெருங்கிய உறவினரான ராம்சரண் தேஜா மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.
ஸ்ரேயாவை பிரிந்த அகிலுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்பதும், அவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout