உலகப்புகழ் பெற்ற விவிஐபி உடன் நடிகை ஸ்ரேயா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'சிவாஜி', விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்', ஜெயம் ரவியுடன் 'மழை', விக்ரமுடன் 'கந்தசாமி' என பல வெற்றி படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் வரும் 11ஆம் தேதி தனது 33வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மட்டுமின்றி அமெரிக்காவிற்கு அவர் ஒரு விவிஐபி அழைப்பின்பேரில் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விவிஐபி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. தற்போது நடைபெற்று யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்றைய போட்டியில் சானியா மிர்சா மற்றும் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முக்கிய போட்டி ஒன்றில் விளையாடி வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி இந்த ஜோடி அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியை பார்க்க ஸ்ரேயாவுக்கு, சானியாவின் கெஸ்ட் பாஸ் கிடைத்துள்ளது. இதனால் அவர் இன்றைய போட்டியில் நேரடியாக பார்த்து மகிழ்ந்துள்ளார்.
போட்டிக்கு பின்னர் தனது சமூகவலைத்தளத்தில் இந்த போட்டியின் புகைப்படங்கள் மற்றும் சானியா மிர்சாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை ஸ்ரேயா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஸ்ரேயாவின் பிறந்த நாள் பார்ட்டிக்கும் சானியா மிர்சா நேரில் கலந்து கொள்ள சம்மதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெரிய விவிஐபி உடன் பிறந்த நாளை வரும் வெள்ளியன்று கொண்டாடவுள்ள ஸ்ரேயாவுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com