காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஏற்கனவே 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளதால் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 12 ஆகவும், மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையும் 23ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று நடைபெற்ற மகளிர் டபுள் டிராப் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

தங்கம் வென்ற தங்கமங்கை ஷ்ரேயாசிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.