விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்?

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

சீயான் விக்ரம் மகன் அறிமுகமாகும் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக் ஆகும்

இந்த நிலையில் இந்த படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா ஷர்மா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு மகளாக நடித்தவர் என்பதும் கவுதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தில் காவ்யா என்ற வேடத்திலும் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருவ்-ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக விரைவில் படமாக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை முகேஷ் மேத்தா என்பவர் தயாரித்து வருகிறார்.