ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது 'அண்டாவ காணோம்'.. தயாரிப்பாளரின் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த ’திமிரு’ பிரகாஷ்ராஜ் நடித்த ’காஞ்சிவரம்’ தங்கர் பச்சான் இயக்கிய ’பள்ளிக்கூடம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’.
இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின் தள்ளி வைக்கப்பட்டது என்பதும் அதன் பின் திடீரென ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததாகவும் அதன் பின் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ரிலீசுக்கு ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
வினோத் முன்னா மற்றும் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கி உள்ளார். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Andavakaanom good content never fails for sure this will 😀entertain all segment audience after a long struggle we are releasing 👍 worldwide this June @sriyareddy @rajkumarleo @onlynikil @divomovies #velmathi pic.twitter.com/5PupIbHCe2
— JSK Satishkumar (@JSKfilmcorp) April 11, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com