ஊரடங்கு நேரத்தில், கொட்டும் மழையில், நடுரோட்டில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ்மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது பார்சிலோனாவில் உள்ளார்

இந்த நிலையில் பார்சிலோனாவில் இருந்துகொண்டு அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரேயா. அவருடைய ஒவ்வொரு வீடியோவிற்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பார்சிலோனாவில் உள்ள ஒரு சாலை ஒன்றில் நடுரோட்டில் கொட்டும் மழையில் நடனமாடும் வீடியோவே ஸ்ரேயா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜெயம்ரவியுடன் நடித்த ’மழை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நீ வரும்போது நான் மறைவேனா’ என்ற பாடலுக்கு அவர் நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக இருந்த பிருந்தாவுக்கு தனது நன்றிகள் என்றும் இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் கொட்டும் மழையில் நடுரோட்டில் நடிகை ஸ்ரேயா நடனமாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

ஊழியருக்கு கொரோனா: சென்னை அண்ணாசாலை பிரியாணி கடையை மூடிய போலீசார்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த கடையை போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்

கொரோனா நோய்த்தொற்று எந்தெந்த உடல் உறுப்புகளை, எப்படி பாதிக்கிறது தெரியுமா???

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவும் போது நிமோனியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது

20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விபட்டதும் பார்த்ததும் இல்லை.

சென்னையில் இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: 5000ஐ நெருங்குவதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக சென்னையில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில்