உதயநிதிக்கு ஜோடியாகும் விக்ரம் வேதா' நாயகி

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

நடிகர் உதயநிதியின் அடுத்தபடமான பிரியதர்ஷன் இயக்கியுள்ள 'நிமிர்' திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடைந்து மிக விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சமீபத்தில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் ஒன்றில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் உதயநிதி நடிக்கும் இன்னொரு படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். இவர் தற்போது விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உதயநிதி-மித்ரன் இணையும் இந்த படத்தில் 'விக்ரம் வேதா' நாயகி ஷாரதா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரை இயக்குனர் உருவாகியுள்ளதாக கூறிய ஷராதா ஸ்ரீநாத், ஒரு பெரிய நிறுவனத்தின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வரும் புத்தாண்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.

More News

சி.வி.குமாரின் 'மாயவன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கிய முதல் திரைப்படமான 'மாயவன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்

'அருவி'யின் அபாரமான ஓப்பனிங் வசூல் விபரம்

100 வருட தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போன்று அனைவரும் போற்றும் வகையில் ஒரு படம் உருவாகுவது அபூர்வமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் தான்

'அருவி' அதிதிபாலனுக்கு ஷங்கர் பாராட்டு

கடந்த வாரம் வெளிவந்த 'அருவி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

விஜய்சேதுபதி, நயன்தாரா முதன்முதலில் இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் 'இமைக்கா நொடிகள்'.

டுவிட்டரில் ஓவியாவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பெற்றவர் ஓவியா