'பிக்பாஸ்' அபிராமி குறித்து 'நேர் கொண்ட பார்வை' நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு நூலிழையில் தப்பித்து வரும் அபிராமி இந்த வாரமும் நாமினேஷனில் இருந்தாலும், அவருக்கு கிடைத்து கொண்டிருக்கும் வாக்குகளை பார்க்கும்போது இந்த வாரமும் அவர் வழக்கம்போல் தப்பித்துவிடுவார் என்றே தெரிகிறது

இந்த நிலையில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அபிராமி, இந்த படத்தின் ரிலீசின்போதும் பிக்பாஸ் வீட்டில்தான் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் நாயகியான ஷராதா ஸ்ரீநாத், பிக்பாஸில் அபிராமி குறித்து கருத்து தெரிவிக்கையில், 'நான் பிக்பாஸ் ஷோ பார்ப்பது இல்லை. அதனால் அபிராமியின் நிலை குறித்து எனக்கு தெரியாது. இருப்பினும் நான் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்கிறேன். அதில் பதிவு செய்யப்படும் ஒருசில வீடியோக்களை மட்டும் பார்ப்பேன்.

என்னை பொருத்தவரை அபிராமி ஒரு சந்தோஷமான பொண்ணு. அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுவார். ஆனால் பிக்பாஸில் அவர் எப்படி விளையாடி வருகிறார் என்பது எனக்கு தெரியாது' என்று கூறியுள்ளார்.

More News

வெங்கட்பிரபு வெளியிட்ட சிவாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் சிவா நடித்த 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கிய 'பார்ட்டி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிகிலுக்கு கொடுக்கும் எழுச்சியை இதற்கும் கொடுங்கள்: நடிகர் விவேக் வேண்டுகோள்

பிகில் படத்திற்கு கொடுக்கும் எழுச்சியை தாய் மண்ணுக்காகவும் மரங்களுக்காகவும் கொடுக்க வேண்டும் என நடிகர் விவேக், மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 வயது சிறுவனுக்கு 526 பற்கள்: சென்னை டாக்டர்கள் அதிர்ச்சி

சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

13 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைவாரா ஆஸ்கார் நாயகன்?

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 60' படத்தின்

உணவுக்கு மதம் கிடையாது: ஜொமைட்டோ பதிலடிக்கு வாடிக்கையாளர்கள் ரியாக்சன்

ஆன்லைனில் உணவு சப்ளை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜொமைட்டோ. இந்த நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் தன்னுடைய உணவை இந்து அல்லாத ஒருவர் டெலிவரி செய்தால்