ஏ.ஆர்.முருகதாஸின் நாயகியாகும் பிரபுதேவா நாயகி?

  • IndiaGlitz, [Wednesday,December 23 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது இயக்கி வரும் பாலிவுட் படமான 'அகிரா'. இந்த படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபுதேவா கதாநாயகனாக நடித்த ;ABCD 2' உள்பட பல பாலிவுட் வெற்றி படங்களில் நடித்த ஷாரதா கபூர் ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் மும்பையை பின்னணியாக கொண்ட கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. மும்பையை பின்னணியாக கொண்டு நாயகன், பாட்ஷா உள்பட பல வெற்றி திரைப்படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் மேலும் ஒரு மும்பை பின்னணி படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜல்லிக்கட்டுக்கு மறுப்பு தெரிவித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ...

உதயநிதியின் 'கெத்து' டிராக் லிஸ்ட்

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கெத்து' படத்தின் பாடல்கள் வரும் 25...

பூலோகம் படத்துக்கு கிடைத்த பெரிய பரிசு

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவான 'பூலோகம்' திரைப்படம் பலவித சோதனைகளை கடந்த வரும் 24ஆம் ...

சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம்...

மலேசிய ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி தரும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது...