பிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பம் 4 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை ஒருவரை பாடவும் ஆடவும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை சாரதா தாஸ். இவர்தான் தேவிஸ்ரீ பிரசாத்தின் புதிய ஆல்பத்தில் பாடி நடித்து உள்ளார். கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த பாடல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறியபோது, ‘இந்த பாடலின் ரிஹர்சலின்போதும், ஒரிஜினலை படமாக்கும்போது தான் எந்தவித வித்தியாசத்தையும் பார்க்கவில்லை என்றும் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக சாரதா தாஸ் பாடி நடனமாடியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை தனது மியூசிக் குருவான தந்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், அவருடைய பிறந்த நாள் பரிசாக இதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலின் வீடியோவை தற்போது தேவிஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாரதா தாஸ் இந்த ஆல்பத்தில் பாடி, நடனமாடியது குறித்து கூறியபோது ‘தன்னை முதல்முறையாக பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு நன்றி என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
So here is d 1st of #DSPSingleShotVideos #RAKHI wit @shraddhadas43
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) May 24, 2020
I never know d difference between REHEARSAL & FINAL SHOW
All I know is d LOVE to PERFORM❤️
Thanks to my Father 4 teaching me that????
HAPPY MUSICAL BDAY dearest DADDY#SatyaMurty garu❤️https://t.co/yYTyQgrbTo
I am so honoured and proud and happy to be in your first video wishing your Dad❤️.This was so impromptu on our Dsp USA tour but we had a blast!!! And rocked it too?? Look at your energy ?? https://t.co/GZSgJlovSy
— Shraddha das (@shraddhadas43) May 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments