இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தவறுதலாக மாற்றித் செலுத்திக் கொண்டால் ஆபத்தா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவேக்சின், கோவிஷுல்டு என இரு கொரோனா தடுப்பூசிகள் இடம்பெற்ற நிலையில் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்தத் தடுப்பூசிகளில் எதாவது ஒன்றை 28 நாட்கள் இடைவெளியுடன் 2 டோஸ் எடுத்துக் கொள்ளுமாறு மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி ஒன்றாகவும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வேறொன்றாகவும் தவறுதலாகச் செலுத்தப்பட்டு விட்டது.
இதுகுறித்து, ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை போடக் கூடாது என மத்திய கொரோனா தடுப்பு பணி அலோசகர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை மாற்றிப் போட்டாலும் கூட அதனால் எந்த ஆபத்தும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். அதோடு இருவேறு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி சோதனை செய்து பார்க்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் கோவிஷுல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வு அடுத்த வாரம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout