ஒரு தலை ஃபேன் இன்னொரு தலை ஃபேனுக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதா? 'ஷாட் பூட் த்ரீ' டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,September 21 2023]

வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஷாட் பூட் த்ரீ’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் குறும்பான சேட்டைகளுடன் ஆரம்பிக்கும் இந்த படம் ஒரு கட்டத்தில் பள்ளி மாணவன் வளர்க்கும் நாய் காணாமல் போகிறது. அதை அந்த மாணவர்கள் தேடும் போது கிடைக்கும் திடுக்கிடும் தகவல்கள் தான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது.

இதில் நடித்த ஒரு மாணவனின் பெற்றோர்களாக வெங்கட் பிரபு, சினேகா நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, ஷிவாங்கி, பூவையார் உள்பட பலர் நடித்துள்ளனர். அதேபோல் கைலாஷ், ப்ரநிதி, வேதாந்த் உட்பட சில குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில், ராஜேஷ் வைத்யா இசையில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் ஜாலியாக இருப்பதை அடுத்து நிச்சயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியானால் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா சியான் விக்ரம் படம்? செம்ம போட்டி தான்..!

வரும் தீபாவளி தினத்தில் கார்த்தி நடித்த 'ஜப்பான்' கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' மற்றும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும்

விஜய்யின் 'லியோ' அட்டகாசமான தமிழ் போஸ்டர்.. ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து

ஷாருக்கானுக்கு எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்.. அனிருத் இசை.. மாஸ் தகவல்.!

பிரபல இயக்குனர், ஷாருக்கானுக்கு எழுதி வைத்த கதையை தமிழுக்கு சில மாற்றம் செய்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

நடிகை சாய்பல்லவியின் அடுத்த படம்.. ஹீரோ இந்த பிரபலமா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திருடும் மீனா தம்பி.. கூண்டில் அடைக்கப்பட்ட விஜயா.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திருப்பம்..!

விஜய் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.