இந்திய அணியில் பெட்டிக் கடைக்காரர் மகன்… தந்தையே பயிற்சி கொடுத்து அரிய சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 14 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் துவங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ஒரு பெட்டிக்கடைக்காரரின் மகனும் இடம்பெற்றுள்ளார். இதிலென்ன அதிசயம்? என்று கேட்கலாம்… ஆனால் தன்னுடைய மகனின் வளர்ச்சிக்காக அந்தப் பெட்டிக்கடைக்காரர் செய்த தியாகம்தான் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த கோட்கான் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் ஸ்ரவன் யாதவ். இவர் தன்னுடைய மகன் சித்தார்த் யாதவிற்கு கிரிக்கெட் விளையாட்டின்மீது அதிக ஆர்வம் இருப்பதை அவரது 8 வயதிலேயே தெரிந்து கொண்டார். இதையடுத்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்துவரும் இவர் பயிற்சியாளர் யாரையும் நியமிக்காமல் தினமும் தன்னுடைய மகனுக்காக கடையை மூடிவிட்டு கிரிக்கெட் பயிற்சி கொடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் உற்றார் உறவினர்கள் கூட ஸ்வரன் யாதவை எச்சரித்து இருக்கின்றனர். ஆனால் மகனுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம், பெரிய வசதியில்லை. எனவே தினமும் மதிய வேளையில் 4 மணிநேரம் கடையை மூடிவிட்டு கிரிக்கெட் களத்திற்கு கிளம்பிய ஸ்வரன் யாதவ் தன்னுடைய மகனுக்கு அசராமல் பயிற்சி கொடுத்திருக்கிறார். இதனால் பள்ளி, கல்லூரி காலத்தில் சித்தார்த் பல்வேறு போட்டிகளில் ஜொலித்திருக்கிறார்.
இதையடுத்து 16 வயதுக்குட் பட்டோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சித்தார்த் யாதவ் 2 சதம் மற்றும் 5 சதங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனால் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் அதுவும் உலகக்கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
19 வீரர்கள் அடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த சித்தார்த் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கத. இதையடுத்து சித்தார்த்தின் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த அவருடைய தந்தை ஸ்வரன் யாதவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments