10வது மாடியில் விஐபிக்கள், பரதேசி போல் நடுரோட்டில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

கடந்த சில நாட்களாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் இரண்டு காவல்துறையை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காவலர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஆடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை கிண்டி அருகே உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் 10வது மாடியில் விஐபிக்கள் சொகுசு அறையில் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்காக பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் தங்குவதற்கு கூட இடமின்றி சாலையில் பரதேசி போல் படுத்து தூங்குவதாகவும் அவர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டபோது காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்து உங்களுக்கு வசதி செய்து கொடுக்க எந்தவித தகவலும் வரவில்லை என்று பதில் வந்ததாம். பத்தாவது மாடியில் தங்கியிருக்கும் விஐபிக்களுக்கு பாதுகாப்பு எதற்கு? அப்படியே பாதுகாப்பு கொடுப்பதென்றாலும் அதற்குரிய வசதிகள் காவலர்களுக்கு செய்து தரவேண்டாமா? போலீஸ் என்ன நாயா? அல்லது பிச்சைக்காரனா? காவலர்கள் பலருக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் இதுவும் ஒரு மன அழுத்தத்திற்கான காரணம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்' என்று அந்த காவலர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.