ஓட்டு போட முடியாத சிவகார்த்திகேயன்!

ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்துள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை ஓட்டு போட்ட ஒருசிலரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஓட்டு போட முடியவில்லை.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால் அவரால் இந்த முறை ஓட்டு போட முடியவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் நடிகர் ரோபோசங்கர், நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர்கள் ஓட்டு போட முடியவில்லை.

ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என வாக்காளர்களுக்கு கூறுவதற்கு முன் தேர்தல் கமிஷன் தனது வேலையை சரியாக செய்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.