தமிழ் சினிமா பிரபலங்கள் போதைக்கு அடிமையா? திடுக்கிடும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமா பிரபலங்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதாகவும், சப்ளை செய்வதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் சிலரும் போதைக்கு அடிமையாகியுள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் நடமாட்டங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தமிழ்த் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர் போதை பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ் திரையுலகினர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்யும் கும்பல் யார் என்பதனை கண்காணித்து வருவதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவதோடு, போதைப்பொருள் பயன்படுத்தும் திரையுலகினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென் அமெரிக்காவின் புதிய போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் கூடுதல் கண்காணிப்புடன் கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டும் இதனை தொடர விடாமல் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகை ரஞ்சனி கூறியபோது, போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க, போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறு செய்வோருக்கு கடுமையான தண்டனை அவசியம் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com