83 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உடலில் இருக்குமா??? பீதியை கிளப்பும் புதுத் தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

 

கொரோனா வைரஸ் ஒருவரைப் பாதித்தால் 14 நாட்கள் வரை மட்டுமே உடலில் இருக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு முதற்கொண்டு அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் அளித்து வந்தனர். இந்நிலையில் தி லான்செட் அறிவியல் ஆய்விதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரின் உடலில் 83 நாட்கள் வரையிலும் தங்கி இருக்கும் என்ற ஆதாரப்பூர்வமான தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். இதனால் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

முன்னதாக கொரோனா வைரஸ் உடலில் தங்கி இருக்கும் காலத்தைப் பற்றி ஒரு ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் 9 நாட்கள் வரை மட்டுமே உடலில் தங்கி இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து இருந்தனர். ஆனால் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டைச் சார்ந்த விஞ்ஞானிகள் தற்போது மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரிடன் உடலில் 83 நாட்கள் வரை தங்கி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் சிறிய அறிகுறிகளுடன் கொரோனா பாதித்த நபர்களுக்கு இப்படி நடக்க வாய்ப்பு இல்லை. சிறிய அளவில் கொரோனா பாதித்து இருந்தால் அவர்களின் உடலில் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் நீடித்து இருக்காது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தில் சிக்கிக் கொண்ட பல 100 நபர்களை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களின் உடம்பில் 3 மாதங்கள் வரை கொரோனா வைரஸின் சிறிய டோஸ் நீடித்து வாழ்கிறது என்றும் விளக்கம் அளித்து உள்ளனர். இதைத்தவிர கொரோனா பாதித்த ஒரு நபருக்கு முதல் 5 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என்றும் அந்த நாட்களில் கட்டாயமாகத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.