கலாபவண் மணி கொலையா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,March 07 2016]


தேசியவிருது பெற்ற பிரபல மலையாள நடிகர் கலாபவண் மணி திடீர் மரணம் அடைந்த செய்தியை நேற்றிரவு ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் கலாபவண் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவர் சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முன்னர் தனது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அவர் அருந்திய மதுவில் மெத்தனால் கலந்திருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மெத்தனால் கலந்த மதுதான் அவரது உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே கலாபவண் மணியின் உடல் முழு பிரேத பரிசோதனைக்காக இன்று திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாகவும் இந்த பரிசோதனையின் முடிவு தெரிந்த பின்னரே அவரது மரணம் குறித்த உண்மைகள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய் 60'யில் இணைந்த 'பிரேமம்' பிரபலம்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்...

ஜூனியர் என்.டி.ஆர் இடத்தை பிடித்தார் சிம்பு

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும்

குத்துச்சண்டை வீராங்கனையாகும் கீதாஞ்சலி நாயகி

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி வாமிகா கபியின் நடிப்பு குறிப்பிட்டு பேசப்பட்டது...

உதயநிதி படத்தில் இணைந்த இருபெரும் இசையமைப்பாளர்கள்

கடந்த பொங்கல் தினத்தில் உதயநிதி நடித்த 'கெத்து' திரைப்படம் ரிலீஸாகிய நிலையில் அவருடைய அடுத்தபடமான 'மனிதன்'...

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் நாயகி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டால் அடுத்தது அவர்களுடை கனவு விஜய் அல்லது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்....