'மார்க் ஆண்டனி' படத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்து.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

விஷால் நடித்து வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில், பிரபல மலேசியா நடிகர் டிஎஸ்ஜி மற்றும் செல்வராகவன் உள்பட பலர் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக ரிதுவர்மா நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென ஒரு விபத்து நடந்ததாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.