ஏலியன் குறித்த வெளியான அதிர்ச்சி தகவல்… விலகுமா மர்மம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏலியன் இருப்பது உண்மையா என்பது தற்போதுவரை கேள்வியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சில பெரும் பேராசிரியர்களும் விஞ்ஞானிகளும் கூட ஏலியன் இருப்பது உண்மைதான் என்பதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு சில நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாட்டின் முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் ஏலியன்கள் அமெரிக்க மற்றும் உலகின் சில நாடுகளோடு ரகசியத் தொடர்பு வைத்திருக்கின்றனர். மேலும் ஏலியன்கள் பூமியோடு தொடர்பு கொள்ளவே விரும்புகிறனர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோன்ற ஒரு பரபரப்பை தற்போது Harvard பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஒருவரும் ஏற்படுத்தி இருக்கிறார். வானியல் பேராசிரியரான அவி லோப் விண்வெளியில் பறந்து வரும் விண்கற்கள் மற்றும் கற்கள் அனைத்தும் தானாக வருவதில்லை. அவை ஏலியன்களால் வீசப்படுகிறது. ஏலியன்கள் பயன்படுத்தும் குப்பைகள்தான் இப்படி விண்வெளியில் கற்களாகவும் தூசுகளாகவும் மிதக்கின்றன எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
பொதுவாக மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் செயற்கைக்கோள்கள் செயலிழந்து அவை மீண்டும் விண்வெளியில் குப்பைகளாக மிதப்பதும் வழக்கம். அந்த குப்பைகள் பூமி மீது உரசும்போது சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பேராசிரியர் அவி லோப்பின் கூற்றுப்படி அனைத்து விண்வெளி குப்பைகளும் தானாக ஏற்பட்டது அல்ல. அவை ஏலியன்கள் பயன்படுத்திய குப்பைகளாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆதாரத்தோடு வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்த பேராசிரியர் அவிலோப் கடந்த 2017 ஆம் ஆண்டு Extraterrestrial the first sign of intelligent life beyond earth என்ற புத்தகத்தையும் வெளியிட்டு உள்ளார். அந்தப் புத்தகத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்பதற்கான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பளபளப்பான கல் ஒன்று கடந்த 2017 செப்டம்பர் 6 ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாகவும் அது மீண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி சூரியனை நோக்கி பயணித்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இவரது கூற்றின்படி அந்த பளபளப்பான கல், ஒருவேளை ஏலியன்களின் வாகனமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது. காரணம் ஏலியன்கள் பெரும்பாலும் பறக்கும் தட்டுகளில் பயணிக்கின்றனர். இவர்கள் பூமிக்கு வருவதால்தான் ஆங்காங்கே பூமியில் திடீர் பள்ளங்கள் முளைக்கிறது என்ற கருத்தை ஏற்கனவே விஞ்ஞானிகள் முன்வைத்தனர். அந்த வகையில் பேராசிரியர் அவி லோப்பும் ஏலியன்கள் உண்மையில் இருப்பதாகவும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளே விண்வெளியில் மிதப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments