வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தது உண்மைதான்: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திருநாவுக்கரசு கூட்டாளி

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை நயவஞ்சமாக பேசி, மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது

இந்த் நிலையில் திருநாவுக்கரசு கும்பலின் கூட்டாளியான மணிவண்ணன் என்பவர் சமீபத்தில் சரண் அடைந்த நிலையில் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்தபோது அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த விசாரணையில், 'திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரோடு சேர்ந்து நானும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்தேன்'' என்று மணிவண்ணன் ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்தே திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் மீது சிபிசிஐடி போலீசார் தற்போது புதிய எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய எப்.ஐ.ஆரில் பாலியல் வன்கொடுமை பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவகளுக்கு ஆயுள்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது