சென்னையில் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம்: 2 பெண்கள் புகார்

  • IndiaGlitz, [Wednesday,May 23 2018]

சென்னையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பெண்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை அண்ணா நகர் பாடி பகுதியில் தங்கியிருந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று ஜெஜெ நகர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு தன்னுடைய வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணும் இதேபோன்ற ஒரு புகாரை அளித்துள்ளது காவல்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் ஒருவரை பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More News

வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினோம்: டிஜிபி விளக்கம்

தூத்துகுடியில் நேற்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் இதுவரை 11 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்

நிபா தாக்கி உயிரிழந்த நர்ஸ்: கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்

கேரள மாநிலத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் தாக்கியதால் பலியாகும் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வரும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தின்

இதைவிட கீழ்த்தரமான அரசாங்கத்தை பார்க்கவே முடியாது: கொந்தளித்த பியூஷ் மனுஷ்

இன்று நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒட்டு மொத்த தமிழர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம தெரிவித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ்

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்று நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான அப்பாவி பொதுமக்கள் 9 பேர்களின் மரணத்திற்கு