பிரியங்கா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா இதற்கு முன்னர் விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் பாணியே தனி ஸ்டைல் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக இருக்கும் நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் வழக்கம்போல் மாகாபா ஒரு தொகுப்பாளராக இருக்கும் நிலையில் இன்னொரு தொகுப்பாளராக ஷிவாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பல வருடங்களாக பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் அவரது இடத்தை ஷிவாங்கி பிடித்துவிட்டது பிரியங்கா ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? அல்லது ஷிவாங்கியே தொகுப்பாளினியாக தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'வாயை மூடு': பிரியங்காவிடம் மீண்டும் மோதும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றுவரும் பஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்.

ஒரே ஓவர்… அத்தனை பந்துகளையும் விக்கெட்டாக மாற்றிய 16 வயது சிறுவன்!

துபாயில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஹர்ஷித் சேத் அந்நாட்டில் நடைபெற்ற உள்ளூர் கிளப்

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் விலகல்? அதிர்ச்சியான ரசிகர்கள்!

வரும் 2023 உலகக்கோப்பை போட்டியை கருத்தில்கொண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவை

'ஜெய்பீம்' படத்தில் சூர்யா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இந்த பிரபல நடிகரா?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒருசில அமைப்புகள் மற்றும் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும்

முடிவடையும் நிலையில் 'விருமன்' படப்பிடிப்பு: கார்த்தியின் அடுத்த திட்டம் என்ன?

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் 'விருமன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.