தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அதிரடி நடவடிக்கைகளால் தினமும் ஒரிருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சித் தகவலாக தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 50 பேருக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 74 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சேர்த்து 124 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்ட 50 பேர்களில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 1131 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்களில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதி பேர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

More News

கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி

கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் அடித்து கொலை: ஒரு அதிர்ச்சி சம்பவம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு

மகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக அனைவரும் சலூன் முன் நிற்பார்கள். 21 நாட்கள் முடிவெட்டாமல்

கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது தென்கொரியா: எப்படி தெரியுமா?   

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரும் ஆபத்தில் சிக்கி தவித்திருக்கும் நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா நோயாளிகளே இல்லை என தென்கொரியா அறிவித்துள்ளது

"Patient Zero" கொரோனாவால் பாதித்த முதல் நோயாளி இவர்தான்!!!

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால்