2ஆவது அலை கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகிறதா?

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

இந்தியாவில் 2 ஆவது முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இந்த விகிதம் கடந்த 10 நாட்களை விட இருமடங்கு அதிகரித்து இருப்பதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை பிரேசிலைவிட அதிகரித்து இருக்கிறது. மேலும் அமெரிக்காவை காட்டிலும் சற்று குறைந்து ஒட்டுமொத்த உலகப் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து ஒட்டுமொத்த பாதிப்பில் 70% ஐ இந்த மாநிலங்களே வைத்து இருக்கின்றன. இதனாலும் பாதிப்பு நெருக்கம் அதிகரித்து ஒருவித பதற்றத்தை மேலும் உருவாக்கி உள்ளது. அதிலும் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,695 புதிய பாதிப்பு ஏற்பட்டு 30% பாதிப்பு எண்ணிக்கையை இந்த மாநிலம் மட்டும் வைத்து இருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்து உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், கேரளா, பெங்களூர் என அடுத்தடுத்து பாதிப்பு எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன. இதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,987 பாதிப்பு எண்ணிக்கையைக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இதேபோல மற்ற மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் வீரியம் பெற்று வரும் கொரோனாவின் இரண்டாவது அலை வயது வித்தியாசம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதேபோல அறிகுறிகள் இல்லாமல் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலைமையை கணக்கில் கொண்டு பார்க்கும்போது தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக 1-8 வயது வரையுள்ள குழந்தைகள் இந்த மாறுபட்ட கொரோனா வைரஸ் வகையால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தியாவல் மார்ச் 1- ஏப்ரல் 4 வரை 79,688 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரா-60,884 (5வயது குழந்தைகள் 9,882), சத்தீஸ்கர்-5,940 (5 வயது குழந்தைகள் 922), கர்நாடகா- 7,237, உத்திரப்பிரதேசம்-3,004, டெல்லி-2,733 போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அடுக்கடுக்காக உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதனால் தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய பரிமாணம் பெற்று அறிகுறியே இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள கருத்துக் கணிப்பை பார்க்கும்போது வயது வித்தியாசமின்றி குழந்தைகளும் அதிகளவு தொற்றுக்கு ஆளாகி வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும் அறிகுறியே இல்லாமல் இருப்பதால் சாதாரண சளி, காய்ச்சலையும் பெற்றோர்கள் பொருட்படுத்தாமல் விட்டு விடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

More News

நடிகர் விவேக் உடல்நிலை கவலைக்கிடம், தடுப்பூசியால் பிரச்சனையா? மருத்துவர்கள் விளக்கம்

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்

கொரோனாவால் பாதிப்பு அடைந்த பவர்ஸ்டார்: மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

"நாட்படு தேறல்" 100 பாடல்கள்...முதல் பாடலின் வரிகளை பதிவிட்ட வைரமுத்து...! குவியும் பாராட்டுக்கள்....!

கவிஞர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பில், நூறு  பாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா 2-ஆம் அலை...! தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மூடல்....!

கொரோனா தொற்று  மற்ற மாநிலங்களை போலவே, தமிழகத்திலும் வேகமாக பரவி வருவதால், வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது.