அம்மா என்று கூப்பிடச்சொன்ன லதா மங்கேஷ்கர்… நெகிழ்ச்சியில் கலங்கும் கிரிக்கெட் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இறப்பு இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்களையும் கடும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் லதா மங்கேஷ்கர் பற்றிய தனது நெகிழ்ச்சியான தருணங்களைத் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் நாடு மிகப்பெரிய ஜாம்பவானை இழந்து தவிக்கிறது என லதா மங்கேஷ்கர் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த இரங்கல் செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் அப்தர் வேறொரு தகவலை தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் லதா மங்கேஷ்கரை நான் நீண்ட நாட்களாக நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவே இல்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு நான் இந்தியாவிற்கு வந்தபோது அவரிடம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது “ஜி“ என்று அழைத்தேன். என்னை “ஜி“ என்று அழைக்க வேண்டாம். “அம்மா“ என்றே கூப்பிடுங்கள் எனக்கூறி என்னை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
மேலும் கிரிக்கெட் களத்தில் நீங்கள் சச்சினோடு கடும் ஆக்ரோஷமாக விளையாடுவீர்கள், ஆனால் களத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் மிகவும் மென்மையான மனிதராக மாறிவிடுகிறீர்கள் அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் தங்களை சந்திக்க வேண்டும் என நான் தெரிவித்தபோது தான் நவராத்திரி விரதம் இருப்பதாகக் கூறியிருந்தார். பின்பு இந்த கனவு நனவாகாமலேயே போய்விட்டது என வருத்தத்தோடு பதிவிட்டு உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments