அம்மா என்று கூப்பிடச்சொன்ன லதா மங்கேஷ்கர்… நெகிழ்ச்சியில் கலங்கும் கிரிக்கெட் பிரபலம்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இறப்பு இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்களையும் கடும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் லதா மங்கேஷ்கர் பற்றிய தனது நெகிழ்ச்சியான தருணங்களைத் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் நாடு மிகப்பெரிய ஜாம்பவானை இழந்து தவிக்கிறது என லதா மங்கேஷ்கர் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த இரங்கல் செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் அப்தர் வேறொரு தகவலை தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் லதா மங்கேஷ்கரை நான் நீண்ட நாட்களாக நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவே இல்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு நான் இந்தியாவிற்கு வந்தபோது அவரிடம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது “ஜி“ என்று அழைத்தேன். என்னை “ஜி“ என்று அழைக்க வேண்டாம். “அம்மா“ என்றே கூப்பிடுங்கள் எனக்கூறி என்னை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் களத்தில் நீங்கள் சச்சினோடு கடும் ஆக்ரோஷமாக விளையாடுவீர்கள், ஆனால் களத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் மிகவும் மென்மையான மனிதராக மாறிவிடுகிறீர்கள் அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் தங்களை சந்திக்க வேண்டும் என நான் தெரிவித்தபோது தான் நவராத்திரி விரதம் இருப்பதாகக் கூறியிருந்தார். பின்பு இந்த கனவு நனவாகாமலேயே போய்விட்டது என வருத்தத்தோடு பதிவிட்டு உள்ளார்.

More News

அஜித்துக்கு அரசியல் தேவையில்லை: இயக்குனர் சுசீந்திரன்

'அஜித்துக்கு அரசியல் தேவை இல்லை' என இன்று நடைபெற்ற 'வீரபாண்டியபுரம்' ஆடியோ விழாவில் இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார். 

முத்தக்காட்சிக்கு கணவர் ஓகே சொன்னாரா? பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

பாலிவுட் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தீபிகா படுகோன்

சிவகார்த்திகேயனின் 20வது படம் குறித்த சூப்பர் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'டான்' என்ற திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும்

ஆஸ்கர் இறுதி பட்டியலில் இந்திய ஆவணப்படம்… கண்கலங்கிய பெண் இயக்குநர்!

94 ஆவது ஆஸ்கர் விருதிற்கான இறுதிப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஆவணப்படம் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே

500 ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரை: சமந்தாவின் சம்பளம்!

தற்போது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை சமந்தா ஆரம்பகாலத்தில் 500 ரூபாய்க்காக வேலை பார்த்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.