பிக்பாஸ் வீட்டில் ஷிவினின் இரண்டாவது காதல்? இந்த சீசனின் அமீர்-பாவனியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் சக போட்டியாளர் ஒருவரை காதலிப்பதை மறைமுகமாக கூறியுள்ள நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனி உருவாக்கிவிட்டார்களா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6 இல் சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் ஷிவின் என்பதும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது உருக்கமான காதலை ரக்சிதாவுடன் பகிர்ந்து கொண்ட ஷிவின் அந்த காதலை தனது அம்மாவுக்காக பிரிந்துவிட்டதாக கூறினார். இதனை அடுத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான விஜே கதிரவன் உடன் ஷிவினுக்கு க்ரஷ் இருப்பதாக தெரிகிறது.
தனது க்ரஷை சூசகமாக ஷிவின் கதிரவனிடம் சொல்லியும் அவர் அதனை இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை என்று அவருடைய ரியாக்சன் இருந்து தெரியவருகிறது.
ஏற்கனவே கதிரவனை ஷெரினா காதலித்ததாகவும் அதன்பின் கதிரவன் தான் தன்னுடைய கிரஷ் என்று விஜே மகேஸ்வரி கூறியதையும் பார்த்தோம். இந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது ஷிவின் இணைந்திருக்கும் நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனியாக கதிரவன் - ஷிவின் மாறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments