இப்படி கொஞ்சம் விளையாடி பாருங்களேன்.. விக்ரமனுக்கு ஷிவன் கூறிய அறிவுரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது 50வது நாளை நெருங்கி வரும் நிலையில் தற்போது ஆட்டம் சூடு பிடித்துள்ளது என்பதும் இப்போதுதான் போட்டியாளர்கள் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஒவ்வொரு வார இறுதியிலும் கமல்ஹாசன் வந்து தவறு செய்யும் போட்டியாளர்களை வறுத்து எடுக்கவும், நன்றாக உரையாடும் போட்டியாளருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் தனிமையில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில், ‘நீங்கள் எப்போதும் சீரியசாகவே விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் காமெடியாக விளையாடி பாருங்கள், அதை நீங்கள் அனுபவியுங்கள். இந்த வீட்டை விட்டு நீங்கள் வெளியே சென்று விட்டால் நீங்கள் இருக்கும் துறையில் காமெடியாக விளையாடுவதற்கு நேரம் என்பதே இருக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை. எனவே இந்த நிகழ்ச்சி உங்களுக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு. இதனை நீங்கள் பயன்படுத்தி கொஞ்சம் காமெடியுடன் சக போட்டியாளர்கள் உடன் விளையாடி பாருங்கள்.
சீரியஸாக கேம் விளையாடுவது என்பதை ஒரு பக்கம் மனதில் வைத்துக் கொண்டாலும் கொஞ்சம் ஜாலியாகவும் விளையாடி பாருங்கள் என்று ஷிவின் அறிவுரை கூறியுள்ளார். அதனை விக்ரமன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இனி வரும் நாட்களில் வேறொரு விக்கிரமனை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Shivin asks Vikraman to show his fun side and enjoy himself, as she thinks he won't get to do that in his outside life.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 20, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/kbxwpYONrt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com