சிவசங்கர் பாபாவிற்கு ஜால்ரா போட்ட சேவகிகள்....! 5 பேர் தலைமறைவு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன், சிவசங்கர் பாபா சிறுமிகளுடன் தவறாக நடக்கவில்லை என்று சுஷில் ஹரி பள்ளியை சார்ந்த ஆசிரியைகள் கூறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா பிடிபட்டது எப்படி...?
பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகள் ஊடகங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து, சுஷில் ஹரி பள்ளியை நடத்தி வந்த பாபா சிவசங்கரும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், சில பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் புகார்கள் வந்தன. இதனடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் இவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்ற, சூப்பிரண்டு காவல் அதிகாரி விஜயகுமார் மேற்பார்வையில், டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பாபா மீது 3 வழக்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து காமக்கொடூரன் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்ததில், காசியாபாத் என்ற இடத்தில் இவனை கைது செய்தனர். டெல்லியிலிருந்து, சென்னை அழைத்து வரப்பட்ட பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
முன்னாள் மாணவி பேட்டி:
இந்த விவகாரம் குறித்து பள்ளியின் முன்னாள் மாணவி பேட்டியில் கூறியிருப்பதாவது,"சென்னை,கேளம்பாக்கத்தில் உள்ளது சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி. இப்பள்ளியை நடத்தி வரும் சங்கர் என்ற சிவசங்கர் பாபா தன்னையே கிருஷ்ணனாக பாவித்துக் கொள்கிறார். அங்கு பள்ளியில் பயிலும் மாணவிகளை கோபிகாக்கள் என்றும் அழைக்கிறார். பாபா வாயை திறந்து மாணவிகளை கோபிகா என அழைத்துவிட்டால் போதும், அவர்களை பாலியல் வன்புணர்வு செய்யாமல் விடமாட்டார். அதிலும் குறிப்பாக சிங்கிள் மதர் உள்ள பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் மற்றும் பயந்த சுபாவம் உள்ளவர்களைத்தான் குறிவைப்பார். அவர்களிடம் நான் தான் உன் அப்பா, நான் தான் உன் பாய்பிரண்ட், நான் தான் உன் கணவன் என்று கூறி, இளம் மாணவிகளை மூளைச்சலவை செய்து விடுவான். தன்னுடைய லாஞ்சிற்கு அழைத்து சென்று குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் மற்றும் மதுபானங்களை குடிக்க தருவார். அந்த இடம் மிகவும் கலர்புல்லாக இருக்கும், மாணவிகளுக்கு பிறந்தநாள் என்றால் விலையுயர்ந்த கிப்ட்களையும், ஆடைகளையும் பரிசாக கொடுப்பார்.சும்மா ஒரு சிப் குடித்து பார் என பள்ளி மாணவிகளிடம் மதுவை குடிக்க சொல்லி வற்புறுத்துவார். இதையெல்லாம் நான் பார்த்ததில்லை, ஆனால் சில பெண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது பற்றி நான் பள்ளியை எதிர்த்து கேள்வி கேட்டபோது, பெற்றோரோரிடம் குறைந்த மதிப்பெண் தான் வாங்கியுள்ளேன், நான் படிக்காத மாணவி என எனக்கு டிசி கொடுத்துவிட்டார்கள். இதை நிரூபிக்கும் வகையில் நான் மற்றொரு பள்ளியில் சேர்ந்து டாப்பர் மாணவியாக என்னை வெளிக்கொண்டு வந்தேன்.பாபாவை தவிர அங்குள்ள யாரும் மாணவிகளை தவறாக நடத்தவும் மாட்டார்கள், பாலியல் வன்புணர்வும் செய்ய மாட்டார்கள். ஆனால் அங்குள்ள ஆசிரியைகளே பாபுவிடம், பெண்களை அழைத்துச்செல்வார்கள். இதையறியாமல் பல பெற்றோர்களும், அவர்களின் குழந்தைகளை இங்கு சேர்க்கிறார்கள், இச்சை எண்ணம் கொண்ட பாபாவை கடவுள் என நம்புகிறார்கள். பலரும் தெரிந்தே மாணவிகளை அங்கு தங்க வைப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது" என்று அப்பெண் கூறினார்.இதே போல் பள்ளியில் படித்த மாணவன் ஒருவரும் அங்கு பாபா செய்த அக்கிரமங்கள் குறித்து பேசியுள்ளார்.
பாபாவின் ஜால்றா சேவகிகள்:
இந்தநிலையில் அங்கு பாபாவுக்கு சேவகிகளாக இருந்த ஆசிரியைகள், மனசாட்சியே இல்லாத நிலையில் நட்சத்திர விடுதியில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
"பாபா மாணவிகளை எதுவும் செய்யவில்லை, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின் இது குறித்து பேசலாம் என்று கூறினார்கள் ஜால்ரா சேவகிகள். செய்தியாளர்கள் மூன்று பேரையும் மடக்கி கேள்வி கேட்டதற்கு, மூவரில் ஒருவர் கூட சரியான பதில் கூறவில்லை. பாபாவிடம் யார் சிறுமிகளை அழைத்து சென்றது..? என்ற கேள்விக்கும் முன்னுக்கு, பின்னுக்கு முரண்பட்ட கருத்துக்களை கூறியிருந்தனர். பாபாவின் வீடியோக்கள் குறித்து கேட்ட போது, "அவர் பெற்றோர்கள் முன்தான் மாணவிகளை தொடுவர், கட்டிப்பிடிப்பார், முத்தம் கொடுப்பார்" இது தவறானது அல்ல, நல்ல முறையில் தொடுவது தான். பாபா நல்லவர், பள்ளியும் பாதுகாப்பானது, மாணவிகளே பாபாவை பார்க்க ஆசைப்படுவார்கள் என ஏகப்பட்ட பொய்களை கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று சுஷில் ஹரி பள்ளியை காவல் துறையினர் சோதனை செய்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்டுடிஸ்க்குகளை பறிமுதல் செய்து, பாபா-வின் ரகசிய அறைக்கு சீல் வைத்தனர் சிபிசிஐடி அதிகாரிகள். இதையடுத்து சிவசங்கரின் சேவகிகளான பள்ளி ஆசிரியைகள் கருணா, நீரஜ், சுஷ்மிதா உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
5 ஆசிரியைகளுக்கு சம்மன்:
பாபாவிற்கு உடந்தையாக இருந்த 5 ஆசிரியைகள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதன்பின் கேளம்பாக்கம் பழனிகார்டன் ஏரியாவில் இருக்கும் 5 ஆசிரியைகளுக்கும் சம்மன் அனுப்ப, சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் முடிவு செய்து, அவர்களின் வீடுகளுக்குச்சென்றனர். ஆனால் அந்த 5 பேரும் தப்பி ஓடியது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் சம்மனை வீட்டு வாசலில் ஒட்டிவிட்டு, விசாரணையை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com