இந்த பாடகருடன் காதலா? வெளிப்படையாக பேசிய ஷிவாங்கி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்து உள்ள நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ என்பதுதான் என்பதும், முதல் சீசன் விட இந்த இரண்டாவது சீசனில் குக் செய்பவர்களும் சரி கோமாளியாக நடிப்பவர்களும் சரி பார்வையாளர்களை அசத்தி வருகிறார்கள் என்பதும், நான் ஸ்டாப் காமெடி அம்சங்களும், காமெடி கண்டெண்ட் அதிகமாகவும் இருப்பதால் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.
குறிப்பாக கோமாளியாக நடிக்கும் ஷிவானியின் ரகளைக்கு அளவே இல்லை என்று கூறலாம். ஷிவாங்கி குக் அஸ்வினை சுற்றிச்சுற்றி வருவதும் அவரிடம் காதலுடன் வழிந்து கொண்டு பேசுவதுமான காட்சிகள் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது. அவரிடம் குழந்தைத்தனமும் காமெடியும் சரியான அளவில் இருப்பதால் அவரை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது தானும் ஷிவாங்கியின் ரசிகர் என்று கூறியது தெரிந்ததே.
இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவாங்கி, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டான் ஷாம் விஷால் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது சிவாங்கி பதில் கூறியதாவது: நானும் டான் சாம் விஷாலும் நல்ல நண்பர்கள். நான் அனைத்து விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர் ஒரு நல்ல நண்பர். மற்றபடி அவரை நான் காதலிக்கவில்லை என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடனும் குழந்தைத்தனத்துடனும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments