பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தனுஷூக்கு நன்றி சொன்ன ஷிவானி: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,October 14 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னால் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த 10 நாட்களாக அவர் பேசிய மொத்த வார்த்தைகளும் ஒரு நான்கு வரிக்குள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவன் அமைதியாகவே உள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானி இருந்தாலும் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் ஆக்டிவாகத்தான் இருக்கிறது என்பதும், அவரது அட்மின்கள் ஏற்கனவே அவர் பதிவுசெய்து வைத்திருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படத்தில் இடம்பெற்ற ’ஜிகிடி கில்லாடி’ என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனுஷூக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தனுஷூக்கு நன்றி தெரிவித்து இருக்கும் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் வழக்கம்போல் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


 

More News

இத்தனை கொண்டாட்டங்களுக்கு நடுவில் சமூக இடைவெளி தாக்குப் பிடிக்குமா??? பதற வைக்கும் புகைப்படங்கள்!!!

இந்தியாவில் இந்த மாதம் அக்டோபர் முதல் வரும் டிசம்பர் வரை தசரா, தீபாவளி, துர்கா பூசை, நவராத்திரி, கிறிஸ்துமஸ் எனக் கொண்டாட்டங்களுக்கு

விஷால்-சிம்பு இயக்குனரின் அடுத்த படத்தில் வரலட்சுமி!

விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த 'காளை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தருண்கோபி இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் 'யானை'. இந்த படத்தில் விஜய்சேதுபதி தயாரித்த

இறந்ததாகக் கூறி உயிரோடிருந்த அண்ணனை, தம்பியே ஃப்ரீசர் பெட்டியில் அஞ்சலிக்காக வைத்த சம்பவம்!!!

சேலம் பகுதியில் உயிரிழந்ததாகக் கூறி முதியவரை அவரது தம்பியே ஃப்ரீசர் பெட்டியில் அஞ்சலிக்காக வைத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹத்ராஸில் அடுத்த கொடூரம்… 4 வயது குழந்தையை உறவினரே சீரழித்த சம்பவம்!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த மாதம் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.

பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்