பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தனுஷூக்கு நன்றி சொன்ன ஷிவானி: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னால் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த 10 நாட்களாக அவர் பேசிய மொத்த வார்த்தைகளும் ஒரு நான்கு வரிக்குள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவன் அமைதியாகவே உள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானி இருந்தாலும் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் ஆக்டிவாகத்தான் இருக்கிறது என்பதும், அவரது அட்மின்கள் ஏற்கனவே அவர் பதிவுசெய்து வைத்திருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படத்தில் இடம்பெற்ற ’ஜிகிடி கில்லாடி’ என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனுஷூக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தனுஷூக்கு நன்றி தெரிவித்து இருக்கும் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் வழக்கம்போல் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
This is for you @dhanushkraja sir ♥️ #JigidiKilladi #Pattas #bigbosstamilseason4 pic.twitter.com/rAoNbc7DfU
— Shivani Narayanan (@ActressShivanii) October 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com