ஃபேவரிட்ஸம் குறித்து சரியான பாயிண்ட் கூறிய ஷிவானி: இவரை போய் மிக்சர் என்பதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் இந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு வர தகுதி இல்லாதவர்கள் என்று யார் யாரை நினைக்கிறீர்கள் என கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்தை கூறினார்கள். அப்போது அனைவரையும் அசத்தும் ஷிவானி கூறிய கருத்து இருந்தது

அவர் இது குறித்து கூறிய போது ’இங்கே எல்லோரிடமும் ஃபேவரிட்ஸம் இருக்கின்றது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இங்கே ஃபேவரிட்ஸம் பண்றங்கவங்களை விட ஃபேவரிட்ஸத்தை ஏற்று கொள்பவர்களை தான் நான் குற்றவாளியாக பார்க்கிறேன். அந்தப் ஃபேவரிட்ஸத்தை ஏற்றுக்கொண்டபோது அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள் என்று நான் பார்க்கிறேன். அப்படி நான் பார்க்கும் இருவர் நிஷா மற்றும் கேபி என்று கூறுகிறார்

அதாவது தங்களுடைய ஆதாயத்திற்காக குரூப்பை ஏற்படுத்துபவர்களை விட அந்த குரூப்பில் போய் இணைந்து கொண்டவர்கள் தான் தங்களுடைய தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள் என்ற ஆணித்தரமான ஒரு கருத்தை மிக எளிமையாக ஷிவானி கூறியுள்ளார் என்று பாராட்டும் நெட்டிசன்கள் ’இவரையா சிலர் மிக்சர்’ என்று கூறுகிறார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஷிவானி பல இடங்களில் அமைதியாக இருந்தாலும் சொல்ல வேண்டிய இடத்தில் தனது கருத்தை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார் என்பதும், குறிப்பாக பார்வையாளர் ஒருவர் கால் செய்தபோதும் ஷிவானி அதற்கு சரியான பதிலை கூறி அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சூர்யாவின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்!

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாவது புதிதில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாரிசுகள் வரை திரையுலகில் அறிமுகமாகி தங்களது திறமைகளை

ஓப்பன் நாமினேஷன்: ரியோவை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் நிலையில் இதுவரை கன்பெக்சன் அறையில் நாமினேஷன் நடந்த நிலையில் இன்று முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது

நிஷா வெளியேறியபோது ரம்யாவும் பாலாவும் செய்த வேலையை பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்ட போது அனைவரும் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர். குறிப்பாக அர்ச்சனா மற்றும் ரியோ தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு

வீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் எடுத்த ஆரத்தி: வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. எதிர்பார்த்தது போலவே நிஷாவின் வெளியேற்றத்தின் போது அர்ச்சனா உடைந்து அழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ்! இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்கள் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்