மிஸ் இந்தியா இறுதி போட்டியில் இருந்து திடீரென விலகிய நடிகை: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,June 29 2022]

2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா இறுதிப்போட்டிக்கு தமிழகம் சார்பில் தகுதி பெற்றிருந்த நடிகை திடீரென இறுதி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிகளின் மகளும் நடிகையுமான ஷிவானி ராஜசேகர் 2022ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தகுதி பெற்றிருந்தார். ஜூலை 3ஆம் தேதி இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் திடீரென இந்த போட்டியில் இருந்து விலகுவதாக ஷிவானி ராஜசேகர் தெரிவித்துள்ளார்

மிஸ் இந்தியா இறுதி போட்டி நடைபெறும் அதே தினத்தில் தனது மருத்துவ கல்லூரி செய்முறை தேர்வு இருக்கும் காரணத்தினால் போட்டியிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு வருந்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா அழகிப் போட்டி மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய இரண்டையும் ஒப்பிடும்போது மருத்துவ தேர்வுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மீண்டும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பேன் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறிய ஷிவானி, தன்னுடைய நல விரும்பிகளுக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

More News

நல்லா இருங்க.. ஆரோக்கியமா இருங்க,, சந்தோஷமா இருங்க: ரசிகருக்கு வாழ்த்து தெரிவித்த அஜித்!

ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித், 'நல்லா இருங்க ஆரோக்கியமாக இருங்க சந்தோசமா இருங்க' என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகை மீனா கணவர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் விளக்கியுள்ளார். 

'தூக்கி போட்டு மிதிப்பான்': அருண்விஜய்யின் 'யானை' கிளிம்ப்ஸ் வீடியோ

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

'வானமே இல்லை': நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரபல நடிகர் சூர்யாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் 'வானமே எல்லை' என பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஆரி நடித்த 'போதைக்கு எதிரான போர்' : விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு!

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) 'போதைக்கு எதிரான போர்' என்ற தலைப்பில்,  வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ்