நட்சத்திர தம்பதியின் வாரிசு நடிகை படபூஜையில் பிரபலங்கள்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

கடந்த 80ஆம் ஆண்டுகளின் தமிழ், தெலுங்கு திரையுலகின் நட்சத்திரன் ஜோடிகள் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர் என்பது தெரிந்ததே. இந்த நட்சத்திர தம்பதியின் மகள் ஷிவானி ராஜசேகர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படமான '2 ஸ்டேட்ஸ்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் ஷிவானி அறிமுகமாகிறார். இந்த படத்தின் நாயகனாக தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடிக்கவுள்ளார். இயக்குனர் வெங்கட் இயக்கவுள்ள இந்த படத்தை எம்.எல்.வி சத்யநாராயணா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ, மற்றும் இயக்குனர் கோடிராமகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் அறிமுகமாவது குறித்து ஷிவானி கூறியபோது, 'இந்த படத்தில் சவாலான கேரக்டரில் நடிக்க என்னை தேர்வு செய்த இயக்குனர் வெங்கட் அவர்களுக்கு நன்றி. மேலும் என்னை சினிமாவில் நடிக்க அனுமதித்த எனது பெற்றோர்களுக்கும் நன்றி. இந்த படத்தின் குழுவினர் என்னை ஒரு இளவரசி போல் பார்த்து கொண்டனர் என்று கூறினார்.

நாயகன் ஆத்வி சேஷ் கூறியபோது, 'இயக்குனர் வெங்கட் எனது இனிய நண்பர். நான் '2 ஸ்டேட்டஸ்' படத்தின் தியேட்டரில் மூன்று முறை பார்த்துள்ளேன். இந்த படத்தின் கதை மிகவும் வலுவானது. என்னுடன் நடிக்கும் ஷிவானி மிகவும் வெளிப்படையானவராக உள்ளார்' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.