சிறு குழந்தையாக மாறிய ஷிவானி நாராயணன்.. துள்ளி குதித்து மழையில் ஆட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் நான்கு போட்டியாளர்களின் ஒருவரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் நேற்று சென்னையில் மழை பெய்த போது தனது வீட்டின் அருகே துள்ளி குதித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி 98 நாட்கள் தாக்குப் பிடித்து அருமையாக விளையாடினார் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் தொடங்கப்பட்டன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவரவர் போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று சென்னையில் மழை பெய்த நிலையில் தனது வீட்டின் அருகே மழையில் நனைந்து துள்ளி குதித்து ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
இந்த பதிவுக்கு ’வெளியே மழை வரும் போது, என் உள்ளே இருக்கும் குழந்தைத்தனம் வெளியே வந்து விடும்’ என்று கேப்ஷாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ’மழையில் ஒரு மயில் ஆடுகிறது’ என்பது உட்பட பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com