குளுகுளு சூரிய அஸ்தமனம், குட்டி உடை: ஷிவானியின் வேற லெவல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஷிவானி நாராயணன் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி உடை மற்றும் டி ஷர்ட்டுடன் சூரிய அஸ்தமனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மாலத்தீவின் அழகு மற்றும் நீல நிற உடையில் இருக்கும் ஷிவானியின் அழகை ரசித்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.