என் அம்மா என்னை திட்டியது சரிதான்: ஷிவானியின் மனம் திறந்த பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னுடைய அம்மா என்னை திட்டியது சரிதான் என்றும் அந்த அளவிற்கு நான் அவருடைய மனதை புண்படுத்தி இருந்தேன் என்றும் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் மனம் திறந்து கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய ஷிவானி நாராயணன் பாலாஜி நிழலிலேயே கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேல் இருந்தார் என்றும், அதனால் அவருடைய தனித்தன்மை கடைசிவரை வெளியாகவில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றபோது ஷிவானியை கடுமையாக திட்டினார் என்பதும் பாலாஜி பின்னாடியே ஏன் செல்கிறார் என்று அவர் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷிவானி நாராயணன் ’என் அம்மா என்னை திட்டியது சரிதான் என்றும் அவரை நான் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளேன் என்றும் அதனால்தான் அவர் என்னை திட்டினார் என்றும் என்னுடைய செயலால் எந்த அளவுக்கு காயமடைந்து இருப்பார் என்பதை நான் புரிந்து கொண்டதால் நான் அமைதியாக இருந்தேன் என்றும் அவர் என்ன சொன்னாலும் என்னுடைய நல்லதுக்காகத்தான் இருக்கும் என்பதால் அவரை நான் எதிர்த்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நான் என் அம்மாவை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது இல்லை என்றும் முதல் முறையாக ஏமாறும் வகையில் நடந்து கொண்டதால் அவர் என்னை திட்டியதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஷிவானியின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com