close
Choose your channels

ஏஆர் ரஹ்மான் பின்னணி இசை, அந்த அரபிக்கடலோரம்: ஷிவானியின் கிளாமர் வீடியோ!

Thursday, September 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் ’அந்த அரபிக்கடலோரம்’ என்ற பாடலின் பின்னணி இசையில் ஷிவானி நாராயணன் பீச் கிளாமர் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும் சமூக வலைதளங்களில் பிரபலமானவருமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது தெரிந்ததே. அவரது இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் அவருடைய வீடியோவை ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி நாராயணன் கிளாமர் உடையில் பீச்சில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பீச்சில் உள்ள தண்ணீரை அள்ளித் தெளிக்கும் இந்த வீடியோவில் பின்னணியில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ’அந்த அரபி கடலோரம்’ பாடலின் பின்னணியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவானி நாராயணன் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ’விக்ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment