நம்ம ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள்… இன்ஸ்டாவில் வாழ்த்தும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,May 05 2023]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் தனது 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் சிறிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு பிறகு அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘இரட்டை ரோஜா’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற தொடர்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4 ஆவது சிசனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இதற்குப் பிறகு அவர் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்கள், புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத் தளங்களிலும் பிரபலமானார்.

சமூகவலைத் தளங்கள் மூலமாக ஷிவானிக்கு எப்போதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவரும் நிலையில் அவர் தனது 22 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக ஒரு பரிசு பொருளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே தலைவி என்று வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

More News

லைவ் வீடியோவில் கண்ணீர் சிந்திய 'அந்நியன்' பட நடிகை சதா… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

அண்டங்காக்கா கொண்டக்காரி எனும் அந்நியன் பாடலுக்கு உற்சாகமான நடனத்தைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் கெட்டியாக இடம்பிடித்துக் கொண்டவர்தான் நடிகை சதா.

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: மாஸ் வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்: தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்

பின் தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்.. இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா?

அஜித் தற்போது வெளிநாட்டு பைக் டூரில் உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் நேபாளத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்

எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தீங்க… எக்குத்தப்பான கேள்விக்கு நாகசைதன்யாவின் பதில்!

தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நடிகர் நாகசைதன்யாவிடம் இதுவரை எத்தனைப் போருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறீர்கள்