நம்ம ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள்… இன்ஸ்டாவில் வாழ்த்தும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் தனது 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் சிறிய கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு பிறகு அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘இரட்டை ரோஜா’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற தொடர்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4 ஆவது சிசனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இதற்குப் பிறகு அவர் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்கள், புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத் தளங்களிலும் பிரபலமானார்.
சமூகவலைத் தளங்கள் மூலமாக ஷிவானிக்கு எப்போதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவரும் நிலையில் அவர் தனது 22 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக ஒரு பரிசு பொருளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே தலைவி என்று வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com