ரெட் ஹேர், டோண்ட் கேர்: ஷிவானியின் எதுகை மோனை கவர்ச்சிப்பதிவு!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஷிவானி நாராயணன் இந்த கொரோனா ஊரடங்கு காலமான ஐந்து மாதத்தில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஷிவானியின் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்ப்பதற்கென்றே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் அக்கவுண்ட் ஆரம்பித்துள்ளனர் என தெரிகிறது. மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவர் பதிவு செய்யும் போது, அதற்கேற்ற வகையில் பதிவு செய்யும் கேப்ஷனும் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது ஷிவானி, வழக்கம்போல் கண்ணாடி முன் நின்று அளித்துள்ள கவர்ச்சி புகைப்படத்தில் ’ரெட் ஹேர்.. டோன்ட் கேர்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த எதுகை மோனை கேப்ஷனை ரசிகர்கள் ஒருபுறம் ரசித்து வந்தாலும் நெட்டிசன்கள் வழக்கம்போல் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திடீரென ஷிவானி தனது தலைமுடியின் கலரை மாற்றியது ஏன் என்ற நாட்டிற்கு தேவையான அவசியமான கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Red Hair , don’t care ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on Sep 13, 2020 at 5:30am PDT