பாலாஜிவை அழவைத்த ஷிவானி: ஆதரவு தந்த சுரேஷ் தாத்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டு புரமோ வீடியோக்களிலும் பாலாஜியை தவிர்க்கும் விதமாக ஷிவானி நடந்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இருவரும் உரையாடும் காட்சி இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் உள்ளன.

அதில் ’நீ ஏன் என்னை பற்றி அப்படி பேசினாய்? என்று ஷிவானி பாலாஜியிடம் கேட்க ’நான் என்ன பேசினேன்? என்று எதுவும் தெரியாதது போல் பாலாஜி கேட்கிறார். ’நீயாவது பரவாயில்லை உனக்கு ஒரு விஷயம் சொன்னால் புரியும், அவளுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னால் புரியறதுக்கே டைம் எடுக்கும் என்று நீ என்னை பற்றி சொல்லி இருக்கிறாய்’ என்று ஷிவானி கோபத்துடன் கேட்க ’உன்னை தப்பாக எதுவும் நான் பேசவில்லையே’ என்று பாலாஜி மறுக்க, ’நீ என்ன பத்தி பேசி இருக்க’ என்று மீண்டும் ஷிவானி சொன்னவுடன், ’சரி என்னை மன்னித்துக் கொள் என்று வழக்கம்போல் பாலாஜி தனது மன்னிப்பு அஸ்திரத்தை எடுத்து விடுகிறார்.

பின்னர் பாலாஜியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க, ‘நீ எதுக்கு ஏன் இப்போது அழுகிறாய்? என்று ஷிவானி கேட்கிறார். இந்த நிலையில் பாலாஜிக்கு ஆறுதல் கூறும் வகையில் சுரேஷ், ‘நீ ஒன்றும் தப்பாக பேசவில்லை, நானும் பார்த்தேன், நீ செய்தது தவறு இல்லை, 100% நான் அவள் முன்னாடியே சொல்வேன்’ என்று பாலாஜிக்கு ஆறுதல் கூறுகிறார்.

மொத்தத்தில் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த எவிக்ட்டான போட்டியாளர்களால் பாலாஜி மிகவும் சோகமாக உள்ளார் என்பதும், வெளியே தன்னை பற்றி நெகட்டிவ் அதிகம் பரவியுள்ளது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது.