அக்கா அணிந்த அதே டிரஸ்ஸில் தங்கை? மாறி மாறி கிளாமரில் கலக்கும் சகோதரி நடிகைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரை உலகின் நடிகைகளான அக்கா தங்கை சகோதரி நடிகைகள் மாறி மாறி கிளாமர் ஃபோட்டோ புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் தெலுங்கு திரை உலகின் நட்சத்திர ஜோடிகளான ராஜசேகர் - ஜீவிதா தம்பதிகளின் மகள்கள் ஷிவானி மற்றும் ஷிவாத்மிகா. அக்கா தங்கையான இருவரும் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’அன்பறிவு’ என்ற திரைப்படத்தின் ஷிவானி நடித்தார் என்பதும் அதன் பின்னர் அவர் உதயநிதி நடித்த 'நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஷிவானியின் தங்கையான ஷிவாத்மிகா, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷிவானி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கிளாமர் உடைகளில் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இருவரும் கிட்டத்தட்ட ஒரே உடையில் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com